கோவை மாவட்டம், சிக்கிராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 102). இவருக்கு இரு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில் செல்லம்மாளுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் 25 செண்ட் நிலத்தை அவரது பிள்ளைகள் எழுதி வாங்கிவிட்டு ஆறாயிரம் ரூபாயை மட்டும் அவரிடம் அளித்துவிட்டு நிர்க்கதியாக விட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த செல்லம்மாள், இது குறித்து காரமடை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவருடைய புகாரை காவல் துறையினர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த செல்லம்மாளிடம் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவரை சமாதானம் செய்ய முயற்சித்தனர். இந்நிலையில் தனக்கு உரிய நீதி வேண்டும் என்றும், குடியிருக்க தனது வீட்டையாவது மீட்டுத் தர வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க; 43 ஆண்டுகளாக சுதந்திர தினத்தன்று இலவசமாக தேசியக் கொடி வழங்கும் மூதாட்டி!