ETV Bharat / city

கை கழுவச் செல்வதாக கம்பி நீட்டியவரை கைது செய்த காவல்துறை!

பொள்ளாச்சியில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தப்பியோடியவரை போலீசார் நீண்ட நேரத்திற்குபிறகு கைது செய்தனர்.

கைது
கைது
author img

By

Published : Apr 23, 2022, 7:32 AM IST

கோவை: பொள்ளாச்சியை அடுத்த கருமாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது உறவினர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் மாணிக்கம் என்பவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணிக்கத்தின் மனைவி தாலுகா போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக, மாணிக்கத்துக்கும் பரமசிவத்துக்கும் இடையே இருந்த தகராறு முற்றிய நிலையில் மாணிக்கம், பரமசிவத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

பரிசோதனை: இது தொடர்பாக பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையின் முடிவில் மாணிக்கத்தை கைது செய்வது என போலீசார் முடிவு செய்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறுவதற்காக மாணிக்கத்தை போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தப்பி ஓட்டம்: அங்கு போலீசார், மருத்துவர்களுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் மாணிக்கம் அங்கிருந்து நைசாக நழுவினார். தாங்கள் அழைத்து வந்த கைதியை காணாததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கையும் களவுமாக பிடிபட்டார்: தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். மூன்று மணி நேர தேடுதலுக்கு பின், மாணிக்கத்தை உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு, அவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 100 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி நகராட்சிக்கு முதல் பெண் ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.