ETV Bharat / city

நான்காவது நாளாக யானையை தேடும் பணியில் வனத்துறை - ஆண் காட்டு யானை

கோவை ஆனைகட்டி பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி வரும் ஆண் காட்டு யானையை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது.

நான்காவது நாளாக யானையை தேடும் பணி தொடர்கிறது

author img

By

Published : Aug 19, 2022, 1:49 PM IST

கோவை: ஆனைக்கட்டி அடுத்த தமிழ்நாடு கேரள எல்லையான கோபனாரி பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை முதல் வாயில் காயத்துடன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றுப்படுகையில் ஆண் காட்டு யானை ஒன்று நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் திடீரென அந்த யானை மாயமானது.

இதனையடுத்து மாயமான காட்டு யானையை தமிழ்நாடு கேரளா வனத்துறையினர் தேடி வந்த நிலையில், தமிழ்நாட்டு வனப்பகுதியான செங்குட்டை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (ஆக.17) அந்த யானை இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் மீண்டும் மாயமானது. தொடர்ந்து செங்குட்டை, ஊக்கயனூர் பகுதியில் வனத்துறையினர் தேடி வந்தனர்.

யானையை தேடும் பணியில் வனத்துறை

எனினும் அந்த பகுதியில் யானை தென்படாததால் நான்காவது நாளான இன்று(ஆக.19) ஆனைக்கட்டி அடுத்த பனப்பள்ளி கொண்டனூர்புதூர் வனப் பகுதியில் இரண்டு குழுவாக சென்ற வனத்துறையினர். யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானையை கவர்வதற்காக யானை விரும்பி சாப்பிடக்கூடிய பலா பழத்தையும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து வந்துள்ள யானை பாகன்களும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை வனத்துறையில் கண்களுக்கு தென்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானையை கண்டறிந்த வனத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.