கோயம்புத்தூர்: பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ஜவஹர்லால் நேரு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் 1997ஆம் ஆண்டு இரண்டாவது அணியில் அவருடன் பணிபுரிந்த காவலர்கள் மற்றும் காவல் காக்கும் உதவும் கரங்கள் சார்பாக நிதி திரட்டினர்.
பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் வசிக்கும் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று (ஜூலை19) சென்ற சக காவலர்கள், ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ரூபாய் 13,05,500-க்கான காசோலையை அவரது மனைவி உஷா ராணி, மகள்கள் ஷஸ்திகா, ஜோஸிகா உள்ளிட்ட குடும்பத்தினரிடம் வழங்கினர். நிதியை பெற்றுக்கொண்ட காவலர் குடும்பத்தினர் சக காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கண்வலிக்கிழங்கு விவசாயிகளின் நலனுக்காக அரசு நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்