ETV Bharat / city

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - நிகழ்வுகளின் தொகுப்பு

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்
author img

By

Published : Aug 9, 2021, 6:13 AM IST

பிரதமர் மோடி தலைமையில் ஐநா பாதுகாப்பு சபை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 9) காணொலி மூலம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மோடி
மோடி

நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று (ஆகஸ்ட் 9) காலை 11:30 மணிக்கு தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.

பி.டி.ஆர். பழனிவேல்
பி.டி.ஆர். பழனிவேல்

சேலத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால், இன்றுமுதல் வரும் 23ஆம் தேதிவரை அனைத்துக் கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறக்க கட்டுப்பாடு
கடைகள் திறக்க கட்டுப்பாடு

டெல்லியில் இன்றுமுதல் வாரச்சந்தை திறக்க அனுமதி

டெல்லியில் கரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியதையடுத்து, இன்றுமுதல் (ஆகஸ்ட் 9) வாரச்சந்தை திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

மேலும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.