ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் ஜோதி நகரில் காவலர் காயத்திரி, அவரது கணவர் கார்த்திக்சங்கர், நண்பர் சபீன் ஆகியோர் கே.பி.பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஈமு கோழி பண்ணை நிறுவனத்தை 2012ஆம் ஆண்டு தொடங்கினர்.
அதில் சில திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால், பல லட்சம் வரை வருமானம் வரும் என பல நம்பிக்கை வார்த்தைகளை வைத்து பரப்புரை செய்தனர். இதை நம்பி, மூன்று கோடியே 42 லட்சத்து எட்டாயிரத்து 100 ரூபாயை 73 பேர் முதலீடு செய்து மூன்று வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தனர். ஆனால், ஒப்பந்த காலம் முடியும் முன்பே பணத்தை தராமல் தலைமறைவாகியுள்ளனர்.
இது குறித்து வெங்கடேசன் என்ற முதலீட்டாளர் கடந்த 2012ஆம் ஆண்டு ஈரோட்டில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மூன்று பேரும் கைதாகி பிணையில் வெளிவந்தனர். இது தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் டான்பீட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்நிலையில், இன்று (டிச. 18) நடைபெற்ற இறுதிக் கட்ட விசாரணையில், கோயம்புத்தூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, குற்றவாளிகள் மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மூவருக்கும் சேர்த்து இரண்டு கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...சாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!