கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையில் இரவு 8 மணி அளவில் வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று, சேத்துமடை மூவேந்தர் காலனி குடியிருப்பு பகுதியில் புகுந்துவிட்டது. அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒலிப்பெருக்கி மூலம் வெளியே யாரும் வர வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வைகை அணையிலிருந்து பயிற்சி மேற்கொள்ள வந்துள்ள பயிற்சி மாணவர்களும் கலந்துகொண்டு யானையை விரட்டும் பணியில் இறங்கியுள்ளனர். வனத்துறை சார்பில் நவமலை மலைவாழ் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த யானை நவமலைப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலைவாழ் மக்கள் சிறுமி ரஞ்சனா, பெரியவர் மாகாளி உட்பட இருவரை கொன்ற யானை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவா? - ஷாக் கொடுத்த ரயில்வே நிர்வாகம்!