கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து 500 கிராம் தலைமுடி, சேம்பு பாக்கெட்டுகள் அகற்றம் செய்யப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் மருத்துவமனையின் தலைவரும், மருத்துவருமான வி.ஜி.மோகன் பிரசாத் பேட்டியளித்தார்.
சில தினங்களுக்கு முன் 13 வயது சிறுமி வயிற்று வலியால் மருத்துவமனைக்கு வந்தார். அவரை சி.டி. சோதனைக் கருவி போன்றவற்றால் பரிசோதித்ததில், அவரது இரைப்பையில் ஒரு பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது. அதனை ஆராயும் போது அது தலைமுடி என்று தெரியவந்தது.
சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா: மருந்து தயார்... இந்தியாவிலிருந்து கிளம்பும் போதி தர்மர்!
அச்சிறுமி மன உளைச்சலினால் அவரது தலைமுடியை பிடுங்கி வாயிலிட்டு விழுங்கி இரைப்பையில் ஒரு பெரிய கட்டி போல் அந்த முடியானது உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பு பாக்கெட்களும் இருந்தன.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்!
இது போன்ற கட்டிகள் வாழ்நாளில் அபூர்வமாக பார்க்கப்படும் ஒன்று. இது குறித்து சிறுமியின் குடும்பத்தாரிடம் விசாரிக்கும் போது, சிறுமியின் தாய்மாமன் ஆறு மாதங்களுக்கு முன் இறந்துள்ளார். அந்த மனவேதனையின் காரணமாக சிலர் இவ்வாறு நடந்து கொள்வர் என்று மனநல மருத்துவர் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
எண்டோஸ்கோபி மூலம் அகற்ற முடியாததால் அறுவை சிகிச்சை மருத்துவரின் உதவியோடு அதை அகற்றியதாக அவர் கூறினார். இதுகுறித்து பேசிய அறுவை சிகிச்சை மருத்துவர் கோகுல், குழந்தைகளின் வாழ்க்கை நடைமுறை பழக்கவழக்கங்களில் ஏதேனும் மாறுதல் தென்பட்டால் உடனடியாக பெற்றோர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.