ETV Bharat / city

‘டிஜிபி வாகனத்தில் அதிமுக பணப்பட்டுவாடா’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு - ஸ்டாலின் பிரச்சாரம்

கோவை: டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் வாகனங்களில் பணத்தை கொண்டுச்சென்று அதனை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதாக அதிமுகவினர் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

mk stalin
author img

By

Published : Apr 4, 2019, 6:06 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் பகுதியில் பொள்ளாச்சி தொகுதியின் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து அவர் மக்கள் முன் திறந்த வேனில் உரையாற்றினார்.

ஸ்டாலின் பரப்புரை

அப்போது ஸ்டாலின்பேசியதாவது, “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் போது, அடிமையாக உள்ள இந்த ஆட்சியும் அகற்றப்படும்.

ஊழல் செய்வதில் நம்பர் ஒன் கில்லாடியாக விளங்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம், எடப்பாடி பழனிசாமி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது ஒரு கபட நாடகம். வேலூரில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையத்தின் உதவியோடு முயற்சிகள் நடந்துவருகிறது.

ஓட்டுக்குப் பணம் கொடுக்க டிஜிபி ராஜேந்திரன் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்சில் பணம் எடுத்து செல்லப்படுகிறது. இதனை போலீஸ் தடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணியினர் சோதனையிடுவோம். யாராலும் மறக்க முடியாத சோகம் பொள்ளாச்சி பாலியல் விவகாரம். அதனை அரசியலாக்க நான் விரும்பவில்லை. இருப்பினும், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் உடந்தையாக இருந்துள்ளனர்.

சர்வாதிகாரி மோடி, உதவாக்கரை எடப்பாடி பழனிசாமி இருவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என ஸ்டாலின் தன் உரையை முடித்துக்கொண்டார்.

சு.சீனிவாசன்.       கோவை

ஊழல் செய்வதில் நம்பர் ஓன் கில்லாடி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எனவும்,  ஊழல் செய்வதில் எடப்பாடி பழனிசாமி எல்லாம்  வேலுமணியிடம் பிச்சை வாங்கனும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என பிரதமர் மோடி குறித்து பாடல் பாடி வாக்கு சேகரித்தார்.
மேலும் மத்தியில் உள்ள மோடி ஆட்சியை அப்புறபடுத்தும் போது, அடிமையாக உள்ள இந்த ஆட்சியும் அகற்றப்படும் என தெரிவித்தார். 
ஊழல் செய்வதில் நம்பர் ஓன் கில்லாடி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எனவும், 
ஊழல் செய்வதில் எடப்பாடி பழனிசாமி எல்லாம்  வேலுமணியிடம் பிச்சை வாங்கனும் எனக்கூறிய அவர்,  ஊழலை எப்படி செய்ய வேண்டும் என வேலுமணியிடம்தான் மற்ற அமைச்சர்கள் கற்றுகொள்ள வேண்டுமென தெரிவித்தார் திமுக பொருளாளர்
துரை முருகன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது கபாட நாடகம் எனவும், வேலூரில் தேர்தலை நிறுத்த நிறுத்த தேர்தல் ஆணையத்தின் உதவியோடு முயற்சி நடப்பதாகவும் குற்றமாசாட்டிய அவர்,  மடியில் கணமில்லை வழியில் பயமில்லை என்பதால் இதனை சட்டப்படி சந்திக்க தயார் என்றார்.
ஓட்டுக்கு பணம் கொடுக்க டிஜிபி
ராஜேந்திரன் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்சில் பணம் எடுத்து செல்லப்படுகிறது எனவும், இதனை போலீஸ் தடுக்கவில்லை எனில் திமுக கூட்டணியினர் சோதனையிடுவோம் என ஸ்டாலின் கூறினார். யாராலும் மறக்க முடியாத சோகம் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் எனவும், அதனை அரசியலாக்க நான் விரும்பவில்லை எனவும் கூறிய அவர்,  200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதற்கு அதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் உடந்தையாக இருந்ததாக தெரிவித்தார். இவ்வழக்கில் தொடர்புடையஸபார் நாகராஜ் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டியவர் எனவும்,  கலெக்டர் ஆபீசுக்கு போயி பேட்டி கொடுக்க தைரியம் கொடுத்தவர் வேலுமணி எனவும் அவர் கூறினார்.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்தை வெளி கொண்டு வந்த நக்கீரன் ஆசிரியரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர் எனவும், பொள்ளாச்சி பெயரை பெண் காவலர்கள் கூட  வெளியில் சொல்ல வெட்கப்படுகின்றனர் எனவும் கூறிய அவர், இதற்கு காரணம் வேலுமணியும், பொள்ளாச்சி ஜெயராமனும் காரணமென்றார். சர்வாதிகாரி மோடி, உதவாக்கரை எடப்பாடி இருவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.