கோயம்புத்தூர்:Coimbatore: கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் திமு கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 25 வயதிற்குட்பட்ட பெண்கள், ஆண்கள் என மொத்தம் 1000 புதிய உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். இதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கோவை மக்கள் குசும்பு மட்டுமில்லாமல் ஏமாற்றியும் விடுகிறார்கள்
நிகச்சியில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,
'கோவையில் இளைஞர்கள் இளம்பெண்களைச் சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. கோவை மக்களுக்கு குசும்பு ஜாஸ்தி. அதேபோல ஏமாற்றமும் அதிகம் அளிப்பவர்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள்.
அதேபோல், கோவை மக்கள் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எங்களை ஏமாற்றி விடாதீர்கள்' என திமுக உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமில் கோரிக்கை விடுத்தார்.
கரோனாவில் இருந்து காப்பாற்றினோம்
கரோனாவில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றி உள்ளோம் எனவும்; இனிவரும் நோயையும் எதிர்கொள்வோம் எனவும் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை ஆவின் பால் விலையை முதலமைச்சர் குறைத்துள்ளதாகக் கூறிய அவர் பெண்களுக்கு நகரப் பேருந்தில் இலவசப் பயணம் ஆகியவற்றை ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனக்குத் தொகுதிக்கு 10,000 பேர் கழகத்தில் சேர்க்க வேண்டும் என இலக்கு தரப்பட்டு 24 லட்சம் பேரை இணைத்துள்ளதாகவும்; திமுக செயலாளர்கள் பொறுப்பாளர்கள் சேர்ந்து 2 கோடி பேரை திமுகவில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் தரப்பட்டுள்ளது என்றும்; அதனையும் அவர்கள் முடிக்க வேண்டும் எனவும் கூறினார்.
அமைச்சர் பதவியில் ஆசை இல்லை - உதயநிதி ஸ்டாலின்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நான் அமைச்சர், துணை முதலமைச்சர், மேலும் முதலமைச்சர் பொறுப்பிற்கு ஆசைப்படாதவன் எனவும்; தங்களை மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் ஏமாற்றிவிடாதீர்கள் எனவும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
நெட்டிசன்கள் கலாய்க்கு முற்றுப்புள்ளி
-
#அன்பில்_மகேஷ் ~ உதயநிதி திறமையானவர்; அதனால் அவர் தமிழ்நாட்டின் அமைச்சராக வர வேண்டும்...#உதயநிதி திறமையானவர்னு யாரு சொன்னா.?
— Shanthalingam (@Shanthalingam2) December 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
யாரும் சொல்லல.. அதான் நாங்களே சொல்றோம்..😂😂😂#DMKFails #DMKFailsTN #திருட்டுதிமுக #திருட்டு_திமுக pic.twitter.com/76sMRfXZNV
">#அன்பில்_மகேஷ் ~ உதயநிதி திறமையானவர்; அதனால் அவர் தமிழ்நாட்டின் அமைச்சராக வர வேண்டும்...#உதயநிதி திறமையானவர்னு யாரு சொன்னா.?
— Shanthalingam (@Shanthalingam2) December 1, 2021
யாரும் சொல்லல.. அதான் நாங்களே சொல்றோம்..😂😂😂#DMKFails #DMKFailsTN #திருட்டுதிமுக #திருட்டு_திமுக pic.twitter.com/76sMRfXZNV#அன்பில்_மகேஷ் ~ உதயநிதி திறமையானவர்; அதனால் அவர் தமிழ்நாட்டின் அமைச்சராக வர வேண்டும்...#உதயநிதி திறமையானவர்னு யாரு சொன்னா.?
— Shanthalingam (@Shanthalingam2) December 1, 2021
யாரும் சொல்லல.. அதான் நாங்களே சொல்றோம்..😂😂😂#DMKFails #DMKFailsTN #திருட்டுதிமுக #திருட்டு_திமுக pic.twitter.com/76sMRfXZNV
-
உதயநிதி அமைச்சராக வேண்டும்-அன்பில் மகேஷ்#DMKFailsTN #UdhayanidhiStalin #AnbilMahesh pic.twitter.com/9DeDlQMTSh
— தி.மு.க கேடு தரும் (@DMKkills) December 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உதயநிதி அமைச்சராக வேண்டும்-அன்பில் மகேஷ்#DMKFailsTN #UdhayanidhiStalin #AnbilMahesh pic.twitter.com/9DeDlQMTSh
— தி.மு.க கேடு தரும் (@DMKkills) December 3, 2021உதயநிதி அமைச்சராக வேண்டும்-அன்பில் மகேஷ்#DMKFailsTN #UdhayanidhiStalin #AnbilMahesh pic.twitter.com/9DeDlQMTSh
— தி.மு.க கேடு தரும் (@DMKkills) December 3, 2021
கடந்த சில தினங்களுக்கு முன் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நண்பருமான அன்பில் மகேஷ் உதயநிதி அமைச்சராவதே அனைத்துத் தமிழர்களின் ஆசை எனக் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் மீம்ஸ் பதிவிட்டு கலாய்த்துத்தள்ளினர். இன்று இந்த கலாய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உதயநிதி பதில் அளித்துள்ளார்.
இந்நிகழ்வில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மகேந்திரன் கோவை மாவட்டச் செயலாளர்கள் பையா கிருஷ்ணன், நா.கார்த்திக், சி.ஆர். ராமசந்திரன், பொள்ளாச்சி வரதராஜ், பொங்களூரு பழனிச்சாமி உட்பட 100க்கும் மேற்பட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:Jayakumar criticize DMK: அதிமுகவை அழிப்பதே திமுகவின் நோக்கம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்