ETV Bharat / city

பத்திரிகையாளர் என மோசடி செய்வோர் மீது கடும்நடவடிக்கை: கோவை கலெக்டர் எச்சரிக்கை

author img

By

Published : Sep 13, 2022, 3:55 PM IST

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கோவையில் பத்திரிகையாளர்கள் என்று பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று (செப்.13) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும்; அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருகிறேன் என்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்து விடுவதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வரப்பெற்றுள்ளதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அரசுப் பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை பத்திரிகையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 94980 42423 என்ற Whatsapp எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை நீட்டிக்க வேண்டும்... சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.