ETV Bharat / city

கோவை மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்; பேச்சுவார்த்தைக்குப்பின் ஒத்திவைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 3, 2022, 6:27 PM IST

கோயம்புத்தூர்: பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(அக்.03) காலை 8 மணி முதல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் 250-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதைக்கண்டித்து மற்ற தூய்மைப்பணியாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என போராட்டத்தினை வழிநடத்திய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப்பேச்சு வார்த்தையில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின்போது
பேச்சுவார்த்தையின்போது

பேச்சுவார்த்தையில் 18 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வமாக கொடுக்கும்படி தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் சார்பில் ஆட்சியர் உட்பட அலுவலர்களிடம் கேட்கப்பட்டது. உயர் அலுவலர்களுடன் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த தூய்மைப்பணியாளர் சங்க நிர்வாகிகள், பேச்சுவார்த்தை 100% வெற்றிபெற்று விட்டதாகவும், ஆனால் எழுத்துப்பூர்வமாக அரசு தரப்பில் இருந்து தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளதாகவும் கூறினர்.

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்

இதனையடுத்து பேட்டியளித்த தூய்மைப்பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், '18 அம்ச கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்று இருக்கிறது. குறைந்தபட்ச கூலி, பணிநிரந்தரம் போன்றவை அரசு எடுக்க வேண்டிய முடிவு என்பதால் அரசுடன் பேசிவிட்டு, இறுதி முடிவு தெரிவிப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். மேலும், எழுத்துப்பூர்வமாக அரசு தரப்பில் இருந்து கடிதம் வந்தால் போராட்டம் முடித்துக்கொள்ளப்படும். இல்லையெனில் நாளையும் போராட்டம் தொடரும்' எனத் தெரிவித்தார்.

போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள் கலைந்து சென்றனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய காத்திருப்புப் போராட்டம் பிற்பகல் வரை நீடித்ததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி வழங்குக - ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் வென்றவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.