கோயம்புத்தூர்: நாளை (ஏப். 6) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளிலுக்கும் வாக்களிக்கும் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சக்கர நாற்காலி போன்றவை லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. கோவையில் 10 தொகுதிகளையும் சேர்த்து 4,427 வாக்குச்சாவடிகளும், 1050 வாக்கு மையங்களும் உள்ளன.
ஒவ்வொரு வாகனத்திலும் பாதுகாப்பிற்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்று (ஏப். 5) மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் இந்த இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்படும்.
இதையும் படிங்க: பாஜக பேரணியில் கல்வீசப்பட்ட கடையில் காலணி வாங்கிய கமல்!