கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த ஹரிஹரன் (23) இருசக்கர வாகன விபத்து காரணமாக மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று (ஏப்.18) உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உறுப்புகள், உறவினர்கள் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.
அந்த வகையில், அவரது இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளன. இந்தத் தகவலையறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன் இளைஞரின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உடனிருந்தார்.
இதையும் படிங்க: இறந்தும் பல்வேறு உயிர்களில் வாழும் மனிதர் : திருச்சியில் நெகிழ்ச்சி