கோயம்புத்தூர்: பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியரை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மேற்கு மகளிர் காவலர்கள் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் (நவம்பர் 25) நடைபெற்றது. அதில், அவரை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், விசாரணை முடிந்து நேற்று (நவம்பர் 26) மாலை நீதிமன்றத்தில் ஆசிரியர் முன்னிறுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 10ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர், மீண்டும் அவர் உடுமலைபேட்டை கிளைச் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.