கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டம் கோபி நம்பியூரில் ஹெல்த்தி பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நாட்டுக்கோழி பண்ணை நிறுவனத்தை கார்த்திகா, மணிகண்டன், முருகன், பிரபு, சதீஷ், இராமசாமி, சாமுண்டீஸ்வரி, ராஜேந்திரன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு நடத்தி வந்துள்ளனர். அப்போது பல்வேறு திட்டங்களை அவர்கள் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பல திட்டங்கள்
அதாவது, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 500 நாட்டுக் கோழி குஞ்சுகள் கொடுத்து தேவையான தீவனம், மருந்துகள் வழங்கி மாதம் 8,500 ரூபாயும், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக 8,500 ரூபாய் தருவதாக உறுதியளித்துள்ளனர். மேலும் விஐபி திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுத்து முதலீட்டாளர்களுக்கு 300 நாட்டுக் கோழி குஞ்சுகள் கொடுத்து மாதம் 8,500 ரூபாயும் வருட முடிவில் ஊக்கத்தொகையாக 12,000 ரூபாய் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.
மூன்று வருடம் ஒப்பந்தமிட்டு பணத்தை தராமல் 99 முதலீட்டாளர்களிடம் 1 கோடியே 55 லட்சம் பணத்தை ஏமாற்றி பெற்று தலைமறைவாகியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் தண்டனை
அதில் கார்த்திகா மற்றும் பிரபு ஆகிய இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1.65 கோடி அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். எஞ்சிய 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை - பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி