ETV Bharat / city

ஹேக்கர்களிடமிருந்து விலகியே இருங்கள் - சைபர் கிரைம் தரும் அறிவுரைகள்!

ஹேக்கர்களிடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

coimbatore cyber crime alert
coimbatore cyber crime alert
author img

By

Published : Jun 19, 2021, 6:39 AM IST

கோயம்புத்தூர்: இணையதள சேவை பயன்பாடு அதிகரிப்பால், ஹேக்கர்களிடமிருந்து கவனமாக இருக்கும்படி சைபர் கிரைம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் இணையவழி சேவைகளைப் பயன்படுத்தியே தங்களுக்குத் தேவையான பல பொருட்களை வாங்கி வருகின்றனர். இணையதளங்கள் மூலம் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.

இச்சூழலில், மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர், பொதுமக்கள் இணையதளங்களைப் பயன்படுத்தும் பொழுது மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும்; ஊரடங்கைப் பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கீழ்வருமாறு...

  • ஊரடங்கைப் பயன்படுத்தி இணையவழியாக வேலை வாங்கித் தருவதாகக் கூறி யாரேனும் பணம் செலுத்த வேண்டும் என்று தொடர்பு கொண்டால், அந்த தொடர்பைத் துண்டிக்க வேண்டும்.
  • பெண்கள் தங்களது புகைப்படத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஏதேனும் அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்களை, பணப்பரிவர்த்தனைக்காக கேட்டால், அந்த அழைப்பைத் துண்டிக்க வேண்டும்.
  • ஏதேனும் நிறுவனம் என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் வர்த்தகர் என்று அறிமுகமாகி, உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி, சமூக விரோதிகள் உங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடும்.
  • கைபேசிக்கு வரும் தவறான குறுஞ்செய்திகளை நம்பி, அதில் உள்ள இணைப்பை (லிங்) தொடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • வங்கிக் கடன் தருவதாக வங்கி கிளை மேலாளர் தொலைபேசி அல்லது வேறு ஏதேனும் சமூக வலைதளத்தின் மூலம் தொடர்புகொண்டு வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டால் தெரிவிக்கக் கூடாது.
  • கரோனாவைப் பயன்படுத்தி இணையதளத்தில் குறைந்த விலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தருவதாகவும், முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் யாரேனும் கூறினால் செலுத்த வேண்டாம்.
  • இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தைக் கண்டறியும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கைரேகைகளைப் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • இணையதளத்தில் பகிரப்படும் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் வர்த்தக தள்ளுபடி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.
  • பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து பணம் கேட்டு மிரட்டினால், உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்

உள்ளிட்டப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.