கோவையை அடுத்த வடவள்ளி பகுதி பொம்மணாம்பாளையத்தில் சென்னையிலிருந்து வந்த நபருக்கு இரு தினங்களுக்கு முன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று உறுதியானது.
இந்நிலையில் அவரது மனைவி (39), மகள் (19) இருவருக்கும் இன்று வைரஸ் தொற்று உறுதியானது. அவர்கள் இருவரும் இன்று ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு மருத்துவ பரிசோதனை குழு வரவழைக்கப்பட்டு 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனோடு அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கோவை பீளமேடு பகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் வீட்டின் அருகே ஒருவருக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.