ETV Bharat / city

குடியரசு நாள் விழாவில் கோவை மாணவர்கள் நடனம் - 75th republic day celebration at delhi

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தில் தமிழ்நாடு சார்பில் கோவையைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய நடனமாட தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் 75வது குடியரசு தின விழா  கோவை கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய நடனமாட தேர்வு  ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் நடனம்  coimbatore college students selected  75th republic day celebration at delhi  covai team dance for ar rahman song
குடியரசு தின விழாவில் கோவை மாணவர்கள் நடனம்
author img

By

Published : Dec 23, 2021, 3:27 PM IST

கோயம்புத்தூர்: நாட்டின் 75ஆவது குடியரசு நாள் விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் கொண்டாடப்படுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்வேறு மாநில பாரம்பரிய நடனங்கள் இடம்பெறும்.

பாரம்பரிய நடனங்களை ஊக்குவிக்கும்விதமாக மத்திய பாதுகாப்பு - கலாசார அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாரம்பரிய நடனத்தை நடனமாடும் குழுவினர், கல்லூரி மாணவர்கள் தேர்ந்தெடுத்து குடியரசு நாள் விழாவில் நடனமாடுவது வழக்கம்.

இதனையடுத்து, அதன்படி வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள குடியரசு நாள் விழாவில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள 323 குழுக்களைச் சார்ந்த மூன்றாயிரத்து 870 பேர் ஆர்வம் தெரிவித்தனர்.

இதனையடுத்து போட்டியாளர்கள் தேர்வுசெய்யும் நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது இதில் 480 நடனக்கலைஞர்கள் தமிழ்நாடு சார்பில் நடனமாடத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வந்த வந்தே மாதரம் பாடலுக்கு குழு நடனம்

கோவை கல்லூரி தேர்வு

தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களில், கோவை மாவட்டம் கணியூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர். கல்லூரியைச் சார்ந்த 24 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் நடனமாட உள்ளனர்.

இது குறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், "ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வந்த வந்தே மாதரம் பாடலுக்கு குழு நடனமாக வித்தியாசமான முறையில் எங்களுடைய நடனம் இருந்ததால் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஜனவரி 26ஆம் தேதி நடைபெறக்கூடிய விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை எடுத்து உரைக்கும்விதமாக எங்கள் நடனம் அமையும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.