ETV Bharat / city

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா- கிராண்ட் மாஸ்டர், சியாம் சுந்தரிடம் ஜோதி ஒப்படைப்பு - தமிழ்நாடு அரசு

கோவையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழாவில் கிராண்ட் மாஸ்டர், சியாம் சுந்தரிடம் ஜோதி வழங்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா
author img

By

Published : Jul 25, 2022, 8:47 PM IST

கோயம்புத்தூர்: 44-ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒலிம்பியாட் ஜோதி இன்று (ஜூலை 25) கோவை கொண்டுவரப்பட்டு கொடிசியா வளாகத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒலிம்பியாட் ஜோதியானது கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலிருந்து கொடிசியா வரை எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் கொடிசியா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி சாமிநாதன் ராமச்சந்திரன் ஆகியோர் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டம் சார்பில் அந்த ஜோதியினை கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தரிடம் வழங்கினர்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா

இந்நிகழ்வில் தமிழ்நாடு சார்பில் பல்வேறு விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த வீரர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் அதிபிரைவு சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது 10 மாணவர்களுடன் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் சதுரங்கம் விளையாடினார். அதனைத் தொடர்ந்து செஸ் கேக் வெட்டப்பட்டது.

இந்நிகழ்வில் 16 மாவட்ட பிரதிநிதிகளிடம் மாதிரி ஜோதிகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர்கள் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மேற்கு மண்டல ஐஜி, கோவை மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மேயர் மற்றும் துணை மேயர் உட்பட செஸ் ஒலிம்பியாட் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா

மேலும் இந்நிகழ்வினை காண்பதற்கு கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அழைத்துவரப்பட்டனர்.

இதையும் படிங்க: 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏராளமானத் திட்டங்களை செயல்படுத்துவது தமிழ்நாடு தான்' - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.