கோவை: மாவட்ட மதுவிலக்கு கண்காணிப்பாளர் மகேஷ் குமார், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சின்ன காமன் பொள்ளாச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
இந்த வாகனச் சோதனையில் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொள்ளாச்சி பகுதிக்கு அதிக விலைக்கு மது விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 200 மது பாட்டில்கள், 16 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை மதுவிலக்கு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.