சென்னை: பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சையத் ஜாபர் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் இன்று (மார்ச் 31) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். திமுகவினர் சமூகத்திற்கு எதிரானவர்கள்.
இலவச சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ளன.
திமுகவில் உள்ள ஆ. ராசா, உதயநிதி போன்றோர் பெண்களை அவமதிக்கின்றனர். தமிழ்நாட்டில் நான் சென்ற பகுதிகளில் உள்ள மக்கள் திமுகவின் மீது அதிருப்தியில் உள்ளனர். மற்ற நாட்டுத் தலைவர்கள் கரோனாவைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடியிடம் வழிகாட்டுதல் பெறுகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: 'பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மண் தமிழ்நாடு'- உ.பி. முதலமைச்சர் புகழாரம்