கோவை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 15ஆம் தேதி காலை 9 மணிக்கு கோவைப்புதூர் பகுதியில் உள்ள CBM கல்லூரி சாலையில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான "அண்ணா மிதிவண்டி போட்டிகள்" நடத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் கோவை மாவட்டப் பிரிவு மூலமாக இப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ.; மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ.; மாணவிகளுக்கு 15 கி.மீ.; 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பவர்கள், தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ்களை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதில் முதல்பரிசாக 5000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2000 ரூபாய், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு 250 ரூபாய் வழங்கப்படும்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண கியர் இல்லாத மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும் தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்குபெறும் மாணவ மாணவிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'திமுக தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற்றிடுக'... ஆசிரியர்களின் போராட்டம்