கோவை வால்பாறை-28 தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிகளாகும். வனத்தை ஓட்டி தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் இரவு நேரம் மட்டுமில்லாமல், சில நாட்களாகப் பகல் நேரங்களிலும் சாலைகளில் இதன் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடன் தேயிலை பறிக்கும் பணிக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், தனியாருக்குச் சொந்தமான சவரக்காடு தேயிலைத் தோட்டத்தில் வனத்தை விட்டு வெளியே வந்த கரடி தன் குட்டிகளுடன் உலா வருகிறது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சுமார் 23 கோடி மதிப்புள்ள மீனை வேண்டாம் எனக் கடலில் விட்ட நபர்?