இது குறித்து பொள்ளாச்சிக் கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச்சரகத்தில் பிடிக்கப்பட்ட முத்து என்ற யானையை உலாந்தி வனச்சரகம் வரகளியார் என்ற முகாமில் உள்ள கராலில் அடைத்து பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது.
கராலிலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட பின்னர் யானைக்கு காலில் ஏற்பட்ட சிறு காயத்திற்கு வனக்கால்நடை மருத்துவர்களால் சிகிச்சையளிப்பதற்காக மீண்டும் கராலில் அடைக்கப்பட்டு சிகிச்சையுடன் பயிற்சியும் அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்தது.
வரகளியார் முகாமில் பயிற்சி
கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர், கள இயக்குநரின் உத்தரவின்படி, துணை இயக்குநர் ஆனைமலை புலிகள் காப்பகம் அறிவுரைப்படி, வனக்கால்நடை மருத்துவர் மேற்பார்வையில், வனச்சரக அலுவலர், வனப்பணியாளர்கள் முன்னிலையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த யானையை கராலிலிருந்து வெளியில் எடுத்து, வரகளியார் முகாமில் பராமரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.