கோயம்புத்தூர்: காந்திபுரம் தனியார் விடுதியில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா மீது போடப்பட்ட லண்டன் வழக்கை ஏன் திமுக வாபஸ் பெற்றது என்பதை திமுக விளக்க வேண்டும். டிடிவி தினகரன் அதிலிருந்து ஏன் விடுவிக்கப்பட்டார் என்பதை திமுகவினர் தெளிவுபடுத்த வேண்டும். 2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளதால், அவ்வழக்கை நினைத்து ராசா பயப்படுகின்றார்” என்றார்.
ஆ.ராசாவிற்கு ஸ்டாலின் மீது ஏதோ கோபம் எனக் கூறிய புகழேந்தி, ஜெயலலிதாவை ஊழல் ராணி என்று சொல்லும்போது, ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி யார் எனவும் கேள்வியெழுப்பினார். சாதிக் பாட்ஷா மரணம் தொடர்பாக திமுகவினர் ஏன் வாய் திறப்பதில்லை. ஆ.ராசாவுடன் தொலைக்காட்சியில் ஆதாரங்களுடன் நேருக்கு நேராக விவாதிக்க தயார் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஆ.ராசாவிற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்பதை அவர் விளக்க வேண்டும். 2ஜி வழக்கில் ராசா சிறைக்குப்போவது உறுதி எனவும் தெரிவித்தார். திமுகவை தெருவில் நிறுத்தவே, ஜெயலலிதா குறித்து பேசி பிரச்னைகளை கிளப்புகிறார் என்றார்.
ஆ.ராசா குறித்து ராஜேந்திர பாலாஜி பேசியது அவர் சொந்த கருத்தாக இருக்கலாம். ராசா பேசியதால், அவரும் அப்படி பேசியிருக்கலாம் எனக் கூறிய புகழேந்தி, யார் நாகரிகம் இல்லாமல் பேசினாலும் தவறு எனவும் தெரிவித்தார்.
அதிமுகவில் சில வழக்கறிஞர்கள் வழக்கை சரியாக நடத்தாதால், ஜெயலலிதா சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும், அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் வழக்கை சரியாக கையாளவில்லை எனவும் தெரிவித்த அவர், டிடிவி தினகரனை தலைமையாக ஏற்று அவருடன் நிச்சயம் சசிகலா செல்ல மாட்டார், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா என்ன முடிவு செய்கின்றார் என பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.
அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்த முழு காணொலியை காணுங்கள்