சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஒன்பது பேர் (திருநாவுக்கரசு, சபரி ராஜன், மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ், பாபு, ஹெரைன் பால், அருளானந்தம், அருண்குமார்) நேற்று (அக். 20) கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி வழக்கு விசாரணையை வரும் அக். 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் கடந்த 21ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில், விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்களின் சில நகல்கள் நேற்று ஒன்பது பேரிடமும் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் (161, 164 ஸ்டேட்மென்ட்) நகல்கள் கைதான ஒன்பது பேருக்கும் வழங்கப்பட்டது.
![பொள்ளாச்சி பாலியல் வழக்கு, pollachi sexual harrasement case, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, SALEM CITY COMMISSIONER NAJMAL HOTA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13412946_p2.jpg)
சிறைக்கு திரும்பும்வழியில் சந்திப்பு
பின்னர், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருந்த காவல் துறை வாகனம், (TN 30 G 0453) கோயம்புத்தூர் சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களைச் சந்தித்து உரையாடினர்.
![பொள்ளாச்சி பாலியல் வழக்கு, pollachi sexual harrasement case, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, SALEM CITY COMMISSIONER NAJMAL HOTA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13412946_p1.jpg)
குறிப்பாக, பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, சபரி ராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கிச் சென்றது.
![பொள்ளாச்சி பாலியல் வழக்கு, pollachi sexual harrasement case, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, SALEM CITY COMMISSIONER NAJMAL HOTA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13412946_p7.jpg)
ஒழுங்கீன செயலுக்கு பணியிடை நீக்கம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்கள், தங்களது உறவினர்களைச் சந்தித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, சிறப்பு காவல் ஆய்வாளர் உள்பட ஏழு பேரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
![பொள்ளாச்சி பாலியல் வழக்கு, pollachi sexual harrasement case, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, SALEM CITY COMMISSIONER NAJMAL HOTA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13412946_p5.jpg)
இது தொடர்பாக சேலம் மாநகர் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோரை அக்.20ஆம் தேதி (நேற்று) கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
![சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, SALEM CITY COMMISSIONER NAJMAL HOTA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-police-suspent-pic-script-tn10057_21102021014455_2110f_1634760895_459.jpg)
பின்னர், சிறைக்கு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி மேற்படி எதிரிகளை அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த ஒழுங்கீன செயலுக்காக, சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகியோர் சேலம் மாநகர காவல் ஆணையாளரால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நடுவழியில் கைதானவர்கள் இருந்த வாகனம் நிறுத்தப்பட்டது ஏன்?