கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மாலை வனப்பகுதி ஒட்டியுள்ள தினேஷ்குமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் நீளமான அரியவகை பாம்பு உள்ளதாக வனத் துறையினருக்கும் பாம்பு பிடிப்பவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பவரான சந்தோஷ் குமார், தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டின் அருகே இருந்த பாம்பை வெளியே கொண்டுவந்தார்.
அப்போதுதான் அது 16 அடி நீளமுள்ள ராஜநாகம் என்று தெரியவந்தது. சந்தோஷ் குமார் மிக கவனமாகவும், பாம்பை பத்திரமாகவும் பிடித்து, போளுவம்பட்டி வனத் துறையினர் உதவியுடன் வைதேகி அருவி பகுதியிலுள்ள அடர்ந்த வனத்தில் விட்டார்.
இதையும் படிங்க: பல முறை மயக்கமடைந்த 'அரிசி ராஜா' காட்டுயானை !