ETV Bharat / city

இதுவரை அபராதம் ரூ.150 கோடி: நாளைமுதல் கெடுபிடி அதிகமாகும்!

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளைமுதல் (டிசம்பர் 31) மண்டலம் வாரியாகக் குழு அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 30, 2021, 4:55 PM IST

dgs
gfd

சென்னை: தலைநகர் சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உயர் அலுவலர்கள் சென்னை அம்மா மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனைக்குப் பிறகு மூவரும் கூட்டாகச் செய்தியாளரைச் சந்தித்தனர். முன்னதாகப் பேசிய சங்கர் ஜிவால், "இன்றைய ஆலோசனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைக்கப்பட்டு அவர்கள் நாளைமுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்" என்றார்.

மண்டலம் வாரியாகக் குழு அமைத்து கண்காணிப்பு

இதுவரை 150 கோடி ரூபாய் அபராதம்

அதனைத் தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், "சென்னையில் பரவல் அதிகரித்துவருவது தொடர்பாக மத்திய அரசு கடிதம் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

  • முகக் கவசம் எளிமையான வழிமுறை அல்ல; வலிமையான வழிமுறை

கரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்றம் வரும், அதற்குப் பதற்றப்பட வேண்டாம், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 1.15 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. சென்னையில் 10 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன.

முதல் இரண்டு கரோனா அலையைக் குறைக்க மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததுபோல இம்முறையும் அதனைப் பின்பற்ற வேண்டும். இதுவரை 50 லட்சம் நபர்கள் மீது 150 கோடி ரூபாய் அபராதம் போடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் ஆய்வு
ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் ஆய்வு

இனி அபராதங்கள் அதிகமாகும் - எச்சரிக்கை

அதன்பின்னர் பேசிய ககன்தீப் சிங் பேடி, "நாளை காலை முதல் காவல் துறையுடன் மாநகராட்சி இணைந்து மூன்று வேளையும் அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடுவர். தேவை இல்லாமல் மக்கள் கூடினால் அபராதம் விதிக்கப்படும். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முன் அனுமதி வாங்க வேண்டும்.

சென்னையில் ஐந்து லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். எட்டு லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். நோய்த்தொற்று அதிகரித்துவரும் காரணத்தினால் இவர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் நலன்கருதி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அபராதங்கள் அதிகமாக வசூலிக்கப்படும். நாளை கோயில்களுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்கள் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கும்மியடிக்குது கரோனாவும் ஒமைக்ரானும்: இதுல சன்னி லியோனின் குத்தாட்டம் வேறயா?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.