சென்னை: இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த பதினெட்டு வயதான டீனா என்ற பெண் வரிக்குதிரை கடந்த ஒன்றரை மாத காலமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்தது.
பூங்கா கால்நடை மருத்துவர்களால் சிறந்த சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் குதிரையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி டீனா உயிரிழந்து விட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் அரியவகை அணில் குரங்குகள் திருட்டு