ETV Bharat / city

யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது - சென்னை குற்றப்பிரிவு காவல் துறை

சமூக வலைதளங்களில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக யூடியூபர் மாரிதாஸை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

யூடியூபர் மாரிதாஸை மீண்டும் கைது
யூடியூபர் மாரிதாஸை மீண்டும் கைது
author img

By

Published : Dec 11, 2021, 5:49 PM IST

சென்னை: மாரிதாஸ் பதில்கள் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவருபவர் மாரிதாஸ். இவர், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் தனியார் தொலைக்காட்சியில் பணிப்புரியக்கூடிய ஊழியர்கள் பற்றியும், சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் நிர்வாகி அனுப்பியதாக மின்னஞ்சலை காண்பித்து மாரிதாஸ் பேசியிருந்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த வினய் சரவோகி என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். மாரிதாஸ் போலியான மின்னஞ்சலை காண்பித்தும், ஊழியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையானது நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முந்தினம் தனது டிவிட்டர் பக்கத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்ததாக மதுரையில் வைத்து மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகி அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மீண்டும் மாரிதாஸை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மாரிதாஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாரிதாஸ் கைது: புதூர் காவல் நிலையம் முற்றுகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.