நீலகிரி மாவட்டம் சோலாடி வென்ட்வொர்த் எஸ்டேட்டை சேர்ந்தவர்கள் பிரான்சிஸ், செந்தாமரை தம்பதி. இவர்களுக்கு சுபாஷினி(25) என்ற மகள் உள்ளார். சுபாஷினி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் கடந்த மூன்று வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சதிஷ்குமார் என்பவர்க்கும், சுபாஷினிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இரு வீட்டு சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. அப்போது சுபாஷினி வீட்டில் சதீஷ்குமாருக்கு 10 சவரன் நகை வரதட்சணையாக கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருமணம் செப்டம்பர் மாதம் வைத்துக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்துள்ளனர்.
சதீஷ்குமார், சுபாஷினியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக சதீஷ்குமார் சுபாஷிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் சுபாஷினியின் பெற்றோர் திருமணத்தை பற்றி பேசுவதற்காக சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது சதீஷ்குமாரின் பெற்றோர் எங்கள் மகனுக்கு 50 சவரன் நகை போட்டு பெண் கொடுக்க பல பேர் தயாராக உள்ளதால், உங்கள் மகளை என் மகனுக்கு திருமணம் செய்ய முடியாது எனவும், மேலும் சதீஷ்குமார் என் பெற்றோர் கூறுவது தான் நான் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சடைந்த சுபாஷினி மற்றும் அவரது பெற்றோர் இது குறித்து கொத்தவால் சாவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சதீஷ்குமார் மற்றும் அவரது பெற்றோரை இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி.. யூகேஜி சிறுவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்!