சென்னை: கோயம்பேடு பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சூர்யா. இவர், தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அப்போது, ஒரு நண்பர் ஆட்டோவை வீலிங் செய்ய மறுபுறம் 3அடி நீளமுள்ள பட்டாக் கத்தியால் சூர்யா கேக் வெட்டினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரானதால் இதனைக் கண்ட கோயம்பேடு காவல் துறையினர், பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சூர்யாவை கைது செய்தனர்.
கத்தியால் கேக் வெட்டியவருக்கு சிறை
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மீது ஏற்கனவே கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கும் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கத்தி முனையில் இளைஞரிடம் செல்போன் பறிப்பு