ETV Bharat / city

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விமானப் பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்!

author img

By

Published : Jun 7, 2022, 4:12 PM IST

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டுப் பயணிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரக்கன்றுகளை வழங்கினார்.

ma su
ma su

சென்னை: ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், "ஒரே ஒரு பூமி" என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

பூமியைப் பாதுகாக்க அதிகளவில் மரங்களை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன், சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் அமைச்சர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் விமான நிலைய இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.