ETV Bharat / city

'உலக ரத்த தான தினம்' - ரத்த தானம்.. உயிர் தானம்..

author img

By

Published : Jun 13, 2021, 1:49 PM IST

'உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்கிறது புறநானூறு. ஆனால் பசியைப் போக்கும் அன்னதானத்தை விட சிறந்தது ரத்த தானம்.

உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி 'உலக ரத்த தான நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக 2005ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், ‘ஏ’, ‘பி’, ‘ஓ’ ஆகிய ரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான, கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.

'உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்கிறது புறநானூறு. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் பசியைப் போக்கும் அன்னதானத்தை விட சிறந்தது ரத்த தானம். ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான்.

உலக ரத்த தான நாள்
உலக ரத்த தான நாள்

நன்மைகள்:

  • உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
  • ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும்.
  • மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
  • உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?

  • 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் மட்டும் ரத்தத் தானம் செய்யலாம்.
  • அவர்களின் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.
  • ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம்.
  • உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    ரத்த தானம்
    ரத்த தானம்

யாரெல்லாம் செய்யக்கூடாது?

  • மது அருந்தியவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள்
  • தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள்
  • 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள், 45 கிலோவிற்கு கீழ் எடை உள்ளவர்கள்,
  • ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள்
  • எய்ட்ஸ், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் உடையவர்கள்
  • பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய்க் காலங்களில், கர்ப்பக் காலங்களில் உள்ள பெண்கள் என இவர்கள் யாரும் ரத்ததானம் செய்யக்கூடாது.

ஒருவருக்கு ரத்தம் திட்டமிட்டு தேவைப்படுவதில்லை. திடீரென்று தேவைப்படுகிறது. யாரெனும் விபத்தில் சிக்கும் போது, எவருக்கெனும் அறுவை சிகிச்சை செய்யும் போது, ரத்தம் குறைவாக இருக்கும் கர்ப்பிணிகளின் பிரசவத்தின் போது ரத்தம் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் நாம் ரத்த தானம் செய்ய முன்வருவது ஈடில்லாதது. அதனால் ரத்த தானம் செய்வோம். மனித உயிர்களை காப்போம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.