ETV Bharat / city

புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி முடிவு: அமைச்சர் செந்தில் பாலாஜி - புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி முடிவு

தமிழ்நாடு முழுவதும் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி உரை
அமைச்சர் செந்தில் பாலாஜி உரை
author img

By

Published : Apr 6, 2022, 1:39 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 18 ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (மார்ச் 19) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் மார்ச் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 6) மீண்டும் கூடியது. அதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார். அப்போது அவர், "சோழவந்தான் தொகுதி, கல்வேலிப்பட்டி, கொண்டையம்பட்டி, இடையபட்டி ஆகிய பகுதிகளில் தேவையின் அடிப்படையில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தரப்படும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி உரை

தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 193 துணை மின் நிலையங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 துணை மின் நிலையங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

இது தவிர, எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் அடுத்த 2 நாள்களில் புதிய மின்மாற்றிகள் அமைத்துத்தரப்படும். சென்னை மாநகராட்சியின் 5 கோட்டங்களில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி முழுவதிலும் புதைவட மின் கம்பிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் கூடும் சட்டப்பேரவை: திமுகவிற்கு எதிராக பல்வேறு பிரச்னைகளை வைக்கத் தயார் நிலையில் எதிர்க்கட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.