ETV Bharat / city

Sexual harassment - பெண் எஸ்.பிக்குப் பாலியல் தொல்லை: ஜனவரி 5ஆம் தேதி இறுதி விசாரணை

Sexual harassment: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தப் புகார் தொடர்பான நிலையில், விசாகா குழுவின் விசாரணையை எதிர்த்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஜிபி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை  சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஜிபி தாக்கல் செய்த மனு  ஜனவரி 5ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது  sp harrasment case will last enquiry at jan 5  suspende DGP filed petition against visaka committee  chennai High Court ordered
மனு மீதான இறுதி விசாரணை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைப்பு
author img

By

Published : Dec 21, 2021, 5:23 PM IST

சென்னை(Sexual harassment case): பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி விசாரணை நடத்த, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், விசாரணைக் குழுவை மாற்றியமைக்கக்கோரி உள்துறைச் செயலருக்கு மனு அளித்து, அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை தொடங்கி விட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கூட தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

விசாகா குழுவை கலைக்கக் கோரிக்கை

தற்போதைய விசாகா குழுவை கலைத்துவிட்டு, முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணையில் உள்ளது. விசாகா குழு விசாரணை அறிக்கையும், முடிவுகளும் மூடி முத்திரையிட்ட உறையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

டிஜிபி மனுவிற்குப் பதில் மனு

விசாகா கமிட்டிக்கு எதிராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழ்நாடு உள்துறை சார்பில் கூடுதல் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

அந்த பதில் மனுவில் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டே சிறப்பு டிஜிபி மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளில் முகாந்திரம் இருந்ததால் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

விசாரணையில் மனுதாரருக்கு அனைத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஏற்கெனவே சிறப்பு டிஜிபி காவலர்களை அடித்ததாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாகவும், அதேபோல் அவரால் தாக்கப்பட்ட காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாகா குழு, தீர்ப்பாய அந்தஸ்தில் உள்ளதால், அதை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

மனுதாரர் விசாகா குழு மீது குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாகக் கூறி, அரசு தரப்பு கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்தார்.

இதனையடுத்து வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். துறை ரீதியான நடவடிக்கையை தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் ரூ. 150 கோடியில் புதிய திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.