ETV Bharat / city

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை - காவல்துறை விசாரணை - sexual harassment in iit campus

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற புகாரில் உணவக ஊழியரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

author img

By

Published : Aug 2, 2022, 12:59 PM IST

கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஐஐடி மாணவி ஒருவர் விடுதிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது உதவி கேட்டு மாணவி கூச்சலிட்டும் யாரும் வராததால், மாணவி மர்ம நபருடன் சண்டையிட்டு தன்னை காப்பாற்றி கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மாணவி புகார் ஏதும் அளிக்காத நிலையில், மாணவியின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக, ஐஐடியில் வேலை பார்க்கும் வட மாநில நபர்களில் யாராவது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் ஐஐடி வளாகத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் மற்றும் கோட்டூர்புரம் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஐஐடி வளாகத்தில் ஜூஸ் கடை நடத்தி வரும் பீகாரை சேர்ந்த சந்தன்குமார்(24) என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.