சென்னை: 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தமிழ் வரலாற்றுச் சான்றுகளைச் சுட்டிக்காட்டி தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவித்தார்.
பின் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சித்திரை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என மீண்டும் பழைய முறையை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தற்போது மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தை 1 தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அதை உண்மையாக்கும் வகையில் அரசால் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பொதுவெளியில் திரையிடப்பட்ட 'ஜெய் பீம்'