ETV Bharat / city

காவல் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு - தமிழ்நாடு காவல் துறை காலிப்பணியிடம்

தமிழ்நாடு காவல் துறையில் 2021ஆம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடுவது குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு
காவல் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு
author img

By

Published : Jan 12, 2022, 5:01 PM IST

சென்னை: காவல் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 2019ஆம் ஆண்டு வரையிலான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதாகவும், 2020ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 11 ஆயிரத்து 181 பதவிகளுக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், காவல் துறை ஆய்வு, மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டியுள்ளதாகவும் கூறி அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது.

காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலப் பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து, 2021ஆம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடுவது குறித்தும், 2020ஆம் ஆண்டு காலியிடங்கள் நிரப்புவது குறித்த நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் அறிக்கைத் தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், தமிழ்நாடு காவல் சீர்திருத்தச் சட்டப் பிரிவுகளை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: சைரன் விவகாரம்: வரலாறு தெரியாமல் பேசாதீங்க துரைமுருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.