ETV Bharat / city

என்று தணியும் இந்த ஆழ்துளை சோகம்? - சுஜித் தந்த பாடம் என்ன?

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித், நான்கு நாள்களாக தொடர்ந்த மீட்புப் பணிகளுக்குப் பிறகு - அழுகிய நிலையில் சடலமாகத்தான் மீட்கப்பட்டான்.

குழந்தை சுஜித்
author img

By

Published : Oct 29, 2019, 9:19 PM IST

நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தைக் கண்டுபிடிக்கும் டிஜிட்டல் இந்தியாவில், ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தையை உயிருடன் மீட்க ஒரு கருவி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.

மக்களின் அஜாக்கிரதையாலும் அரசு அலுவலர்களின் அலட்சியத்தாலும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஒரு குழந்தையேனும் ஆழ்துளைக் கிணற்றில் விழுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 குழந்தைகளில், பலியான எட்டாவது குழந்தை சுஜித்!

குழந்தை சுஜித்
குழந்தை சுஜித்

திரும்பிவர முடியாத இடத்துக்குப் போய்விட்டான் சுஜித்! ஆனால் சுஜித்தும் அவனைப்போல உயிரிழந்த மற்ற குழந்தைகளும் நமக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

என்று தணியும் இந்த ஆழ்துளை சோகம்? - சுஜித் தந்த பாடம் என்ன?

அவற்றில் முதலாவது, அவ்வப்போது ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுவதைப் பார்த்த பிறகும்... அது குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும்... திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு உரிய முயற்சியை மேற்கொள்ளவில்லை. அனுமதி பெறாமல் போர் போடுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதே நேரம் பொதுமக்களும் ஆழ்துளைக் கிணறுகளை உரிய முறையில் மூடாமல், அல்லது யாரோ மூடாமல் வைத்திருக்கும் குழிகளைக் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கும் அவலம் இன்னமும் நீடிக்கிறது.

இரண்டாவது, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த முதல் குழந்தையை பலியாகவிட்டபோதே - குழந்தையை மீட்பதற்கான சிறந்த கருவியை உருவாக்கும் முயற்சியை அரசு ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மூன்றாவது, குழந்தைகளை இன்னமும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு வர வேண்டும். ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகளுக்கு விளையாடும்போதுகூட கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். ஒருவேளை ஆழ்துளை போன்ற ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அச்சப்படாமல் கயிற்றின் முடிச்சைப் பிடித்துக்கொண்டே மேலே வரும்படி ஒத்திகை செய்துகூட துணிச்சலை வளர்க்க வேண்டும்.

இப்படி ஆழ்துளையில் விழுந்து பலியான எத்தனையோ குழந்தைகள் கற்றுத்தந்த பாடங்கள் ஏராளம். இனியேனும் விழித்துக்கொள்ள காலத்தின் கட்டாயம்.

ஒருவேளை, சுஜித் 88 அடிக்குச் சென்றபிறகு மேற்கொண்ட உச்சபட்ச மீட்பு நடவடிக்கைகளை 22 அடியில் இருந்தபோதே மேற்கொண்டிருந்திருந்தால் அக்குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம்.

மூன்றாவது நாள் மீட்பு பணியில் ஈடுபட்ட ரிக் இயந்திரம்

அல்லது, ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே, தமது நிலத்தில் தோண்டப்பட்டு பயனற்றுப்போன கிணறு சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்று சுஜித்தின் பெற்றோர் ஒருமுறை பார்த்திருந்தால் இந்தப் பேரிழப்பே ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், சுஜித்தை மீட்கும் காட்சிகளைப் பார்த்து பெற்றோர் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் நேரத்தில், அவர்களின் இரண்டு வயதுக் குழந்தை குளியலறை நீரில் மூழ்கி உயிரிழந்த அவலம் நிகழ்ந்துள்ளது ஆறா ரணத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தை சுஜித்திற்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

எல்லாமே வேடிக்கைதான் எதுவும் நமக்கு நேராதவரை! என்ற அலட்சிய மனோபாவத்தை மாற்றுவது ஒன்றே - இதுபோன்ற அவலங்களைக் களைய நாம் எடுத்துவைக்கும் முதல் அடியாக இருக்கும்.

Intro:Body:

what-lesson-we-have-learnt-from-sujiths-loss ?

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.