ETV Bharat / city

கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் மீதான கொலை வழக்கு: விசாரணையின் தற்போதைய நிலை என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

கடலூர் முந்திரி ஆலைத் தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நாளை (நவம்பர் 18) தெரிவிக்கும்படி சிபிசிஐடி காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு

author img

By

Published : Nov 17, 2021, 8:00 PM IST

சென்னை: கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த, பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.

அவரை கடலூர் மக்களவை உறுப்பினர் ரமேஷும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே பாமக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் கே.பாலு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜின் உடலைக் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தனர்.

சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

வழக்கின் தீவிரத்தையடுத்து, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு, கோவிந்தராஜின் சந்தேக மரணம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இவ்வழக்கை காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரைச் சேர்ந்த நான்கு ஆய்வாளர்கள் கொண்ட சிபிசிஐடி காவல் துறையினர் செப்டம்பர் 28ஆம் தேதி விசாரிக்கத் தொடங்கினர்.

கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு
கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் மீதான கொலை வழக்கு

புதுப்பேட்டை காவல் ஆய்வாளர், காடாம்புலியூர் காவல் நிலையத்தின் பொறுப்பு ஆய்வாளர், இச்சம்பவத்திற்குப் பிறகு தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணை குறித்த விவரங்களை சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

எம்.பி., மீது கொலை வழக்குப்பதிவு

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மக்களவை உறுப்பினர் ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலைசெய்தது தெரியவந்தது.

வழக்கின் திருப்புமுனையாக கடந்த அக்.11ஆம் தேதி சிபிசிஐடி காவல் துறையினர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

ஊழியர்களான நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தரராஜன் ஆகிய ஐந்து பேரை சிபிசிஐடியினர் கைது செய்தனர்.

கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு விசாரணை
கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் மீதான கொலை வழக்கு விசாரணை

நீதிமன்றத்தில் சரண்

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி, சந்தேக மரணம் எனப் பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றியது.

இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்.பி., ரமேஷ் அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (நவ.17) விசாரணைக்கு வந்தது.

கடலூர் திமுக எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்
கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்

ஜாமீன் வழங்கக் கூடாது

அப்போது, சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "முந்திரி ஆலையில் இருந்து 7 கிலோ முந்திரியைத் திருடியதாக கோவிந்தராஜு தாக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் எம்.பி., ரமேஷ் இருந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வழக்கின் புலன் விசாரணை முடிவடையாததாலும், மனுதாரர் செல்வாக்கான நபர் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது"எனவும் அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
சிபிஐ விசாரணை

வழக்கு விசாரணையின் போது, எம்.பி., ரமேஷ் தரப்பில், "தொழிற்சாலையில் உள்ள 6 பேர் சேர்ந்து தாக்கியதாக மட்டுமே கூறப்படுவதாகவும், தன் பெயர் குறிப்பிடப்படவில்லை" எனவும் வாதிடப்பட்டது.

மரணமடைந்த கோவிந்தராஜுவின் மகன் செந்தில் வேல் தரப்பில், மனுதாரருக்குச் சலுகை காட்டப்படுவதாகவும், விசாரணை முறையாக நடத்தவில்லை என்பதால் சிபிஐ விசாரணை கோரியுள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது" எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலை

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்க வேண்டி இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் புலன் விசாரணை குறித்த தற்போதைய நிலை, எத்தனை சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளது போன்ற விவரங்களைத் தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை (நவ.18) தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: நீதிபதிகளின் இடமாற்றம்: கொலீஜியத்தின் நிலைப்பாடு குறித்து வழக்கறிஞர்கள் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.