ETV Bharat / city

வாராந்திர ஓய்வு பெறும் காவலர்கள் கட்டாயம் 5 நாள் பணி செய்திருக்க வேண்டும் - அலுவலர்கள்

வாராந்திர ஓய்வு பெறும் காவலர்கள் கட்டாயம் அதற்கு முன் 5 நாள் பணி செய்திருக்க வேண்டும் எனவும், ஓய்வு எடுக்கும் முன் தங்கள் உயர் அலுவலரிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் என காவல் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாராந்திர ஓய்வு காவலர்கள்
வாராந்திர ஓய்வு காவலர்கள்
author img

By

Published : Nov 9, 2021, 8:39 PM IST

சென்னை: வாராந்திர ஓய்வில் செல்லும் காவலர்கள் அதற்கு முன் கட்டாயம் 5 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் எனவும், வாராந்திர ஓய்வை நீட்டிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல் துறையினருக்கு மன அழுத்தம் அதிகம்

கால நேரமின்றி இரவு, பகல் பாராமல் ஓய்வின்றி பணியாற்றுவதால் காவல் துறையினருக்கு மன அழுத்தம் அதிக அளவில் ஏற்படும் சூழல் தொடர்ந்து நீடித்து வந்தது.

இதைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் யோகா பயிற்சி, உளவியல் ரீதியிலான பயிற்சி உள்ளிட்டப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வாராந்திர ஓய்வு எடுக்க அனுமதி பெற வேண்டும்

அதுமட்டுமல்லாமல் காவல் துறையில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவருக்கும் வாராந்திர ஓய்வு அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு, கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் வாராந்திர ஓய்வு பெறும் காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல்துறை மூலம் குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் வாராந்திர ஓய்வு பெறும் காவலர்கள் கட்டாயம் அதற்கு முன் 5 நாள் பணி செய்திருக்க வேண்டும் எனவும், வாராந்திர ஓய்வுக்குச் செல்லும் முன் தங்கள் உயர் அலுவலரிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் வாராந்திர ஓய்வை நீட்டிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு - நீதிமன்றம் செய்தது என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.