ETV Bharat / city

'தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை மையம்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

status
status
author img

By

Published : Nov 3, 2020, 2:04 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டின் கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி , திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யலாம்.

அடுத்த 72 மணி நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், நகரின் சில பகுதிகளில் லேசான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் நின்ற காரில் திடீர் தீ விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.