ETV Bharat / city

'மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்தே தீருவோம்' - துரைமுருகன் பதிலடி - மேகதாது அணை

'மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம்' எனத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடக உள் துறை அமைச்சர் பசவராஜா பொம்மைய்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

துரைமுருகன்
துரைமுருகன்
author img

By

Published : Jul 12, 2021, 10:34 PM IST

சென்னை: "கர்நாடக அமைச்சர் பசவராஜா பொம்மைய்யா, 'மேகதாதுவில் எந்தச் சூழ்நிலையிலும் அணை கட்டியே தீருவோம்' எனக் கூறுவதுபோல், அதனைச் எந்தச் சூழ்நிலையிலும் தடுப்போம் எனக் கூறுவதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது" எனத் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்று கர்நாடக உள் துறை அமைச்சர் பசவராஜா பொம்மைய்யா ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரைத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது.

நீர் நாட்டின் சொத்து

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கிற நீரை இடைமறித்து மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது.

மேலும் நடுவர் மன்றத்தின் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது, அது நாட்டின் சொத்து என்று தீர்ப்புரைத்திருப்பதை கர்நாடக மாநில அமைச்சர் அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன்.

இவ்வளவையும் மீறி அணையைக் கட்டுவோம் என்று சொல்வது, நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் நாங்கள் மதிக்கமாட்டோம் என்று சொல்வதுபோல் தெரிகிறது.

தடுத்தே தீருவோம் - உரிமை உண்டு

இது ஒரு ஜனநாயக நாடு. இத்தகையப் போக்கு ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல. அண்டை மாநிலத்தின் உறவிற்கும் இது உகந்ததல்ல.

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில உள் துறை அமைச்சர் சொல்வதைப்போல் எந்த நிலையிலும் சட்டப்படி அதைத் தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: அரசின் முடிவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.