சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (32). இவரது மனைவி சிந்து. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் சர்வேஷ்வரி என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், இன்று காலை ராஜா தனது குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் பம்மல் வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
![Childdeath WATER LORRY ACCIDENT CHILD DEAD தண்ணீர் லாரி மோதி குழந்தை பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4019358_chennai-1.jpg)
இதில் ராஜா குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், ஒரு வயது குழந்தை, சிந்து மீது லாரி ஏறியதில் கைக்குழந்தை சர்வேஷ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதோடு இச்சம்வபம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.