சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் எடுப்பதற்குத் தடைவிதிக்கக்கோரி சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் அறிக்கைத் தாக்கல்செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பாக இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மூடப்பட்ட நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்கக் கேட்டு, கொடுக்கும் விண்ணப்பங்களை 15 நாள்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நீதிபதிகள், சட்டவிரோத நிறுவனங்களைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மூத்த வழக்குரைஞர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு அறிக்கைத் தாக்கல்செய்ய, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: உலக வங்கி நிதியில் புத்துயிர் பெறும் தமிழ்நாட்டின் அணைகள்!