ETV Bharat / city

ஆட்டோவில் வந்து தண்ணீர் கேன்களை ஆட்டைய போட்ட நூதன திருடன்! - thief in chennai caught CCTV footage

சென்னை: சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் தண்ணீர் கேனை திருடும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

thief
author img

By

Published : May 7, 2019, 7:19 PM IST

சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் பல்வேறு உணவகங்கள் இயங்கி வருகின்றன. அங்கு விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் தண்ணீர் கேன்கள் சமீப காலமாக அடிக்கடி காணாமல் போன வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலையும் வழக்கம்போல் ஒரு உணவகத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேன்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து அந்த உணவகத்தின் உரிமையாளர் சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது மர்ம நபர் ஒருவர் கேன்களை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது.

அதிகாலை நான்கு மணி அளவில் ஆட்டோவில் வரும் அந்த இளைஞர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு கேன்களில் இரண்டை மட்டும் எடுத்துச் செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதையடுத்து தண்ணீர் கேன்களை திருடி செல்லும் அந்த இளைஞர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் தண்ணீர் கேனை திருடும் இளைஞர்.

சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் பல ஹோட்டல்கள் இயங்கி வருகிறது இந்த ஹோட்டல்களில் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் தண்ணீர் கேன்கள் சமீப காலமாக திருடு போகிறது.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் கவலை அடைந்து வருகிறார்கள் இந்த நிலையில் இன்று அதிகாலை அண்ணனிடம் பாதையில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் ஆறு தண்ணீர் கண்களில் ஆட்டோவில் வந்த இளைஞர் இரண்டு தண்ணீர் கண்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சரியாக 4 மணி அளவில் ஹோட்டல் முன்பாக ஆட்டோவை நிறுத்தி தண்ணீர் கண்களை திருடி செல்லும் அந்த இளைஞர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் விசாரித்து வருகிறார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.