மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்வதாக தேமுதிக அறிவித்துள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று விருப்ப மனுக்களை வழங்கினார். அப்போது, தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:
'அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது' - மு.க. ஸ்டாலின் சாடல்!