ETV Bharat / city

ஓபிசி பிரிவினரின் முதுகில் குத்தும் பாஜக - விளாசும் விடுதலை ராஜேந்திரன் - பாஜகவை குற்றஞ்சாட்டிய விடுதலை ராஜேந்திரன்

பாஜக அரசு, அதிகார மையத்தைப் பிடித்துக்கொண்டு ஓபிசி பிரிவினருக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது எனத் திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலை ராஜேந்திரன்
விடுதலை ராஜேந்திரன்
author img

By

Published : Sep 30, 2021, 5:01 PM IST

இந்திய குடிமைப் பணிக்குத் தேர்வு செய்யும் யுபிஎஸ்சியில் (UPSC) ஓபிசி பிரிவினருக்கு கட்-ஆப் மதிப்பெண் 907, EWS (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்), எஸ்சி, எஸ்டி, பிசி அல்லாத மற்ற பிரிவினருக்கு கட்-ஆப் மதிப்பெண் 894 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாகப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான சலுகையில் 86 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றதாக கடந்த 27ஆம் தேதியன்று வெளியிட்டது.

UPSC
UPSC

ஓபிசி பிரிவினரின் முதுகில் குத்தும் பாஜக

இது குறித்து விடுதலை ராஜேந்திரன் கூறுகையில், “பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்சி, எஸ்டி, பிசி அல்லாத மேல் சாதிப் பிரிவினர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது மெரிட், மதிப்பெண் தகுதி, திறமையின் அடிப்படையில்தான் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று சொன்னவர்கள், EWS (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவு) வந்தவுடன், மெரிட் மதிப்பெண் என்று பேசுவதை விட்டுவிட்டு, இட ஒதுக்கீட்டின்படி பணி நியமனம் என்று சொல்லிவருகிறார்கள்.

ஓபிசி பிரிவில் 907 மதிப்பெண்கள் வாங்கினாலும்கூட, EWS 894 வாங்கிக் கொண்டு, மதிப்பெண் அடிப்படையில் தகுதி நிர்ணயம் எனக் கூறுவது எவ்வளவு பெரிய பொய். மதிப்பெண் அடிப்படையில், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லியது மேல் சாதியினரின் நலனுக்காகப் பேசப்பட்டதே தவிர தகுதி திறமைக்காகவோ, கல்வித்தரத்தை மேம்படுத்தவும் பேசப்பட்டது அல்ல.

இதுதான் உண்மையான விஷயம். EWS 894 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் எனக் கூறிவிட்டு தற்போது சில தேர்வுகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.

EWS
EWS

பிராமணர்கள் ஆக்கிரமிப்பு

தொடர்ந்து பேசிய அவர், “பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது ஒரு மாயை, எந்த அடிப்படையில் 10 விழுக்காடு வழங்கப்படுகிறது. புள்ளி விவரத்தின் அடிப்படையா, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கேட்டபோது, அதில் குழப்பங்கள், கோளாறு வரும், நாட்டில் குழப்பம் வரும் என்று சொல்லும் நீங்கள் (பாஜக) உயர் சாதியினருக்கு எந்த அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தீர்கள்.

இட ஒதுக்கீடு தொடர்பாக எந்த ஒரு புள்ளிவிவரமும் கருத்துக் கணிப்பு ஏதேனும் எடுத்திருக்கிறீர்களா? ஒன்றும் எடுக்கவில்லை. மாறாக, அரசு உயர் பதவிகள், பிரதமர் அலுவலகம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். மேலும், அகில இந்திய அளவில் நீதிபதிகள் பதவியை உயர் சாதி, பிராமணர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

பட்டியலின மக்கள் போராடி இட ஒதுக்கீடு பெற வேண்டும்

அதிகார மையத்தில் உள்ளவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடு கொள்கையைக் குழிதோன்றிப் புதைக்கும் நிலை உள்ளது. பட்டியலின மக்கள் போராடித்தான் இட ஒதுக்கீடு பெற வேண்டும்.

கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டுவர பல ஆண்டுகள் காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்படி இருக்க, மூன்றே நாள்களில் நாடாளுமன்றத்தில் போராட்டம் ஏதும் நடத்தாமல், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஏதும் கோரிக்கை வைக்காமல் நிறைவேற்றப்பட்டது.

எந்த ஒரு கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களும் கிடையாது, ஆனால் மோடி அரசு அதனை நிறைவேற்றியது. மூன்று நாள்களில் சட்டத்தை இயற்றி முடிவுக்குக் கொண்டுவருவது என்றால் உங்களது ஆட்சி என்பது மேல் சாதியினரின் நலனுக்காகவே செயல்படுகிறது” என்றார்.

பாஜக
பாஜக

வாக்கு வங்கிக்காக ஓபிசி பிரிவினர்

மேலும், “வாக்கு வங்கிக்காக மட்டும்தான் ஓபிசிக்கு ஆதரவாக இருக்கும். உரிய அங்கீகாரம் கொடுப்போம், சட்ட அங்கீகாரம் கொடுப்போம் என்றெல்லாம் சொல்லிவிட்டு பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கின்றனர். ஆனால், அதிகாரத்திற்கு வரும்போது பிராமணர்களுக்கும் குறிப்பிட்ட சமூகத்திற்குமான ஆட்சிதான் நடக்கிறது.

உத்தரப் பிரதேச அமைச்சரவையைப் பொறுத்தவரை 11 பிராமண அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், ஓட்டு கேட்கும்போது ஓபிசி ஆதரவு வேண்டும் என்று கேட்கின்றனர். ஓபிசி முதுகில் குத்தும் செயலை பாஜக அரசு செய்துவருகிறது. பட்டியலின மக்களுக்கு அதிகார மையத்தில் இடம் கொடுக்காமல் பாஜக அரசு முதுகில் குத்திவருகிறது.

தேர்தல் ஆணையம், பிரதமர் அலுவலகம், உள் துறை உள்ளிட்ட அரசாங்க முக்கியத் துறைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலையில் எத்தனை ஓபிசி பிரிவினர்கள் இடம்பெற்றுள்ளார்கள். பாஜக அரசு, அதிகார மையத்தைப் பிடித்துக் கொண்டு, ஓபிசி பிரிவினருக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது” என்றார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சமூக நீதிக்கான மாநிலம்

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சமூகநீதிக்கான மாநிலம் சமூக நீதிக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிமுக செயல்பட்டது; தற்போதும் செயல்பட்டும்வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பழங்குடியினர், பட்டியலினத்தவர்களுக்கு மறுக்கப்படும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து இது குறித்து கூறிய சமூக ஆர்வலர்கள், “இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வியல் சமூகத்தை மாற்றி அமைக்கவும் அவர்களை உயர் நிலைக்குக் கொண்டுவரவும் தான் இட ஒதுக்கீடு தரப்படுகிறது.

ஆனால், அதிகார மையத்தில் மேல் சாதியினர், இட ஒதுக்கீட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மறுக்கப்படும் நீதி கண்டிப்பாக ஒருநாள் கிடைக்கப் பெறும்” எனத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பட்டியலின மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் - கல்லூரிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.